முயற்சி!
சேலம் அ.தொ.ப. நிலைய முன்னாள் பயிற்சியாளர்கள் பேரவை சேலம் - 7
சேலம் அ.தொ.ப. நிலைய முன்னாள்
பயிற்சியாளர்கள் பேரவை,சேலம்-7
Regd.No.18/2014
SALEM GOVT I.T.I ALUMNI ASSOCIATION, SALEM-7
Alumni Login New Alumni Member RegistrationSALEM GOVT. I.T.I. ALUMNI ASSOCIATION, SALEM-7.
முன்னுரை :
அன்புடையீர், வணக்கம்.
நமது சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று இன்று நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருவாரியான சகோதர / சகோதரிகளின் நீண்டநாள் கனவாக மனதில் புதைந்திருந்த, நாம் பயிற்சி பெற்ற சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நம்மால் ஆன சிறுசிறு உதவிகளை செய்திட வேண்டும் என்ற கனவை நினைவாக்கிட உருவானதே Salem Govt. 1.T.I. Alumni Association என்கிற அமைப்பாகும்.
வரலாற்று சிறப்புமிக்க பேரவை துவக்கவிழா (நாள் :1-12-2013) தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட முன்னாள் பயிற்சியாளர்கள் (Salem Steel Plant Hyundai, TNSTC, Govt. Hospital, JSW, BHEL, MVMD, E.B., சிறப்பித்தனர். இக்காலகட்டத்தில் தற்காலிக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் அறிமுகப்படுத்தப் பட்டது.
முதல் செயற்குழு கூட்டம், சேலம் இரும்பாலை:
7-12-2013 அன்று தலைவர் திரு. K.P சுரேஷ்குமார் அவர்களின் தலைமையில், சேலம் இரும்பாலை வளாக கூட்ட அரங்கத்தில் Salem Govt | TI.Alumni Association-ன் முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அவர்களால் சங்கத்தின் நோக்கங்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் கடந்தகால நிகழ்வுகளையும், நிகழ்கால அவர்களது வளர்ச்சி குறித்தும் கண்ணீர் மல்க உரையாற்றினர்.
உறுப்பினர் சேர்க்கை, சந்தா தொகை நிர்ணயம் செய்தல் பற்றி விவாதிக்கப்பட்டது.
சேலம் இரும்பாலைக்கான பகுதி வாரியான பொறுப்பாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் K. சண்முகம் அவர்கள், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் By-Law உருவாக்கம்
திரு. K. துரைராஜ் SSP, திரு. K.P. சுரேஷ்குமார் SSP, திரு. S. சங்கரன் JTO, Salem Govt. ITl., திரு. R. ராமலிங்கம் SSP,
திரு. K. சுப்ரமணியன் ATO, Salem Govt. ITI., திரு. M. திருநாவுக்கரசு .ITO, Salem Govt. ITI., திரு.T. ஆனந்த் SSP,
திரு. J. ஜெய்சங்கர், பிரிண்டிங் பிரஸ், திரு. N. செந்தில்குமார், ஸ்ரீ சக்தி எலக்ட்ரிக்கல் எஞ்ஜினியரிங்,
திரு. K. சண்முகம் JTO Salem Govt. ITI. ஆகியோர்களின் பெரும் முயற்சியால் By-Law வானது உருவாக்கப்பட்டது.
சங்கப் பதிவு:
6-2-2014 அன்று முறைப்படி Salem Govt IT. Alumni Association என பதிவு செய்யப்பட்டது. (பதிவு எண் : 18/2014, : 6-2-2014)
சங்கப் பதிவின் போது தலைவர் திரு KP சுரேஷ்குமார், பொதுச்செயலாளர் திரு. K. சண்முகம்,
பொருளாளர் திரு. S. சங்கரன், துணைத்தலைவர் திரு. M. திருநாவுக்கரசு, செயலாளர் திரு,K சுப்ரமணியன்,
திரு.T ஆனந்த SSP மற்றும் உறுப்பினர்கள் பங்குபெற்றனர்.
சங்கத்தின் நோக்கங்கள் :
- சேலம் Govt. ITI யில் பயின்ற முன்னாள் பயிற்சியாளர்களை அடையாளம் கண்டு,
அவர்களின் நலனுக்காகப் பாடுபடுதல்.
- சேலம் Govt. ITI யின் நிர்வாக அனுமதியுடன், சேலம் Govt ITI யில் பயின்று வரும் பயிற்சியாளர்களுக்கு,
தொழிற்கல்வித் துறையில் சிறந்து விளங்கும் கல்வியாளர்களைக் கொண்டு இலவச சிறப்பு பயிற்சி அளித்தல்.
- உடல் நலன் பேணுதல், உடற்பயிற்சி, விளையாட்டு குறித்த தகவல்களை
அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தல்.
- அரசால் நடத்தப்படும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை பயிற்சியாளர்களிடையே
ஏற்படுத்துதல், மேற்படி தேர்வுகளில் கலந்துகொள்வதற்கான பயிற்சியை இலவசமாக அளித்தல்.
- தொழிற்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த தகவல் அடங்கிய புத்தகம் வெளியிடுதல், துண்டுப்பிரசுரம்
விதியோகம் செய்தல் மற்றும் பிற உரிய ஊடகங்கள் மூலம் சங்க உறுப்பினர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொண்டு செல்தல்.
- அகில இந்திய தொழிற் தேர்வில் அனைத்து மட்டத்திலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற
பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் மாதிரி தேர்வு நடத்தி பயிற்சி அளித்தல்.
- சேலம் Govt ITI க்கும், பெற்றோர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து நட்புறவை வளர்த்தல்.
- தொழிற்சாலைகளை அணுகி, இறுதியாண்டு பயிற்சியாளர்களுக்கு Campus Interview மூலம் Apprentice Training மற்றும்
வேலைவாய்ப்பு உருவாக்கிடத் தேவையான பணிகளை மேற்கொள்ளுதல்,
- அனைத்துவகையான தொழில் வளர்ச்சி குறித்த அறிவை பயிற்சியாளர்களுக்கு கொண்டு செல்லும் விதமாக
சேலம் Govt. ITI நிர்வாகத்துடன் இணைந்து பயிற்சியாளர்களை Industrial Visit-க்கு அழைத்துச் செல்லுதல்.
- ஆதரவற்ற பயிற்சியாளர்களின் பயிற்சிக்கு இயன்ற வரை உதவுதல்.
- அரசின் அனுமதி மற்றும் மக்களின் ஒத்துழைப்போடு எங்கும் தூய்மை, எங்கும் பசுமையை உருவாக்க முழு முயற்சி மேற்கொள்தல்,
- அரசியல் சார்பற்றும் மற்றும் அரசியல் நோக்கமற்றும் செயல்படுவது.